அஜித்தின் வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகியது இந்த படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் படம் வெளிவந்து 220 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. போட்ட காசை விட அதிக லாபம் எடுத்ததால் அஜித், போனி கபூர் மற்றும் இயக்குனர்கள் ஹச். வினோத் ஆகியோர் செம்ம சந்தோஷத்தில் இருப்பதோடு..
அடுத்த படத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர். AK 61 திரைப்படத்தை வித்தியாசமான கதைக்களத்தில் ஹச். வினோத் எடுக்கவுள்ளார். வலிமை படத்தில் ஒரு சில குறைகள்இருந்தன அதை தற்பொழுது ஆராய்ந்துள்ளார் அடுத்த படத்தில் எந்த குறையும் இல்லாமல் அஜித் ரசிகர்களையும் மக்களையும் கொண்டாட வைக்கும் வகையில் ஒரு புதிய வடிவில் படத்தை எடுக்க உள்ளார்.
இந்த படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன அதோடு மட்டுமல்லாமல் பல டாப் நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.
இந்த படத்தின் கதையை கேட்டவுடன் அஜித்துக்கு ரொம்ப பிடித்து போய்விட்டதாம் தற்போது உடல் அதிரடியாக எடையை குறைத்து புதிய அவதாரம் எடுத்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு தற்பொழுது ஷூட்டிங்கும் நடத்த ரெடியாக இருக்கிறது இந்த படத்தின் மொத்த நாளே 75 நாட்கள் தான்.
75 நாட்களிலேயே படம் வந்து விட வேண்டும் என அஜித் கட்டளை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை எடுத்து முடித்து விட்டு வருகின்ற தீபாவளி அன்று படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.