உலக அளவில் BIKE RIDE செய்ய தயாரான நடிகர் அஜித் – எங்க போறார் தெரியுமா.?

ajith
ajith

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் இதுவரை 60 திரைப்படங்களை கொடுத்துள்ளார் இதில் பல வெற்றி தோல்வி திரைப்படங்களாக இருந்தாலும் சினிமாவில் நல்ல கதைகளம் உள்ள படத்தை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக அஜித் நடிப்பில்  இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை திரைப்படம். மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது இந்த படத்தை தொடர்ந்து அஜித் உடனடியாக இயக்குனர் ஹெச் வினோத் உடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தையும் வலிமை படத்தை தயாரித்த போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் தற்போது படத்தில் சிறு பிரேக் கிடைத்துள்ளது போல் தெரியவருகிறது.

அஜித் சினிமா நேரம் போக மீதி நேரங்களில் பைக்ரேஸ் துப்பாக்கி சுடுதல் போன்ற அவருக்கு பிடித்த சில விஷயங்களை செய்து வருவது வழக்கம் அப்படி வலிமை படத்தின் சூட்டிங் முடிவடைந்த பிறகும் அஜித் பைக்கில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். அதன்படி மீண்டும் தனது சுற்றுலா பயணத்தை தொடங்க ஆரம்பித்துள்ளார்.

இப்பொழுது அஜித் பைக்கில் யூரோப், யுகே போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் அஜித்துடன் பயணம் செய்யும் சிலர் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன