அஜித், நயன்தாரா, த்ரிஷா யாரும் இனி படத்தில் நடிக்கக்கூடாது.? மேடையில் அதிரடி காட்டிய தயாரிப்பாளர்

Viswasam

தமிழ்சினிமாவில் ஒரு படம் நல்ல வசூலை பெறவேண்டுமென்றால் சிறந்த கதை, நடிகர்கள் தேர்வின்  முலம் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாக முடியாது என பலர் கூறியுள்ளனர்.ஏனென்றால் படத்தை பிரமோட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதற்காகத்தான் தயாரிப்பாளர்கள் படம் வெளியாவதற்கு முன்பாகவே இசை வெளியீட்டு விழா, பிரஸ்மீட் என ஏற்பாடு செய்து படத்தை விளம்பரப்படுத்துகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்ற பலரும் தங்கள் படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்வார்கள். ஆனால் இதில் அஜித் மட்டுமே சற்று மாறு பட்டவர். ஏனென்றால் அவர் படத்தில் நடிப்பதோடு சரி அதை சார்ந்த எந்த விஷயத்திலும் அவர் ஈடுபட மாட்டார் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரஸ்மீட்,இசைவெளியீட்டு விழா என எதிலும் கலந்து கொள்ள மாட்டார். சுமார் பத்து வருடங்களாக அவர் கடைபிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை போன்று தமிழ் திரை உலகில் நடிகைகளான  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆகியோர் பட புரமோஷன் நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ள வில்லை என்பது நாம் அறிந்ததே குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த தர்பார் படத்தில் அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை அதைப்போல தளபதி விஜய் நடித்த பிகில் படத்திலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை இதனால் அவர் பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்பு தமிழ்த்திரையில் கால்தடம் பதித்த திரிஷா அவர்களுக்கும் இதுபோன்ற சர்ச்சைக்கு உள்ளானார். சமீபத்தில் பரமபதம் என்ற படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே திரிஷா அவர்கள் கலந்து கொள்ளாததால் படக்குழுவினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவர் பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். இதேபோல ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trisha
Trisha

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்கு வரும் போது இவர்களுக்கு  என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து பிற பட நிகழ்சிகளுக்கு வராத நடிகர்கள் மற்றும் நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க வைக்க கூடாது என முடிவு எடுக்க வேண்டும் என்றும் அதிரடியாக அவர் பேசினார்.