விசேஷ நாட்களில் முன்னணி நடிகர்கள் படங்கள் இறங்குவது சகஜம் அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் மோதுகின்றன. இரண்டு நடிகர்களுக்கு மேலே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ அஜித்தை விட விஜய்க்கு தான் மாஸ் அதிகம் என கூறி அதிக திரையரங்குகளை கேட்டார் இது பெரிய அளவில் வைரலானதை தொடர்ந்து பலரும் பல்வேறு விதமாக கூறி வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் விமர்சகர் ராஜசேகர் மற்றும் ரமேஷ் பாலா கலந்து கொண்டனர் அப்பொழுது யாருக்கு ரசிகர்கள் அதிகம் யார் மாஸ் என்பது குறித்து அவர்களே கூறி உள்ளனர் அவர்கள் சொன்னது என்னவென்றால்.. தமிழகத்தில் விஜயை விட அஜித்துக்கு தான் ரசிகர்கள் அதிகம். தமிழகத்தில் அஜித் தான் மாஸ் என்பதால் அவர் தான் முதலிடம் வசிக்கிறார்.
அதற்கு சான்று கடந்த சில வருடங்களாக அஜித் பெரிய நடிகர்களுடன் மோதி முன்னிலையில் இருந்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அஜித்தின் வேதாளம், கமலின் தூங்காவனம் ஆகிய படங்கள் வெளிவந்தன இதில் அஜித்தின் வேதாளம் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வெற்றி பெற்றது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி அஜித்தின் விசுவாசம், ரஜினியின் பேட்ட ஆகிய படங்கள் மோதின. இதில் சற்று வசூல் அதிகரித்து அஜித்தின் கை ஓங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வீரம் திரைப்படம் கூட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஓடி மாஸ் காட்டியது இப்பொழுது அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு படங்கள் மற்ற இடங்களில் காட்டிலும் தமிழகத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் தான் முன்னிலை வசிக்கும் என கூறியுள்ளனர்.