பார்க்க தான் சிம்பிலிசிட்டி!! ஆனா அஜித்தின் சொத்து மதிப்பு இவ்வளவா!! வைரலாகும் தகவல்…

ajith

திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வலம் வருபவர் தல அஜித். சினிமா ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் ரசிகர்கள் அஜித்தை துவண்டு விட வைக்காமல் அவருக்கு பக்கபலமாக இருந்ததால் அஜித்தும் ரசிகர்களுக்காக படத்தில் கஷ்டப்பட்டு நல்லதொரு படத்தை எடுத்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் வெளியான ஒவ்வொரு திரைப்படமும் ஹிட் அடித்தது எனவே அந்த தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள அனுபவம் வாய்ந்த இயக்குனர் ஹச். வினோத்துடன் 2வது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுக்கப்பட்டு வந்தாலும் படக்குழு எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் மறைமுகமாக வைத்திருந்தனர்.

ஆனால் ரசிகர்களின் கூட்டம் எங்கு சென்றாலும் அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டனர் இதனால் படக்குழு தற்போது அப்டேட்டை வெளியிட முனைப்பு காட்டி உள்ளது வெகு விரைவில் வெளிவரும் என இயக்குனர் பதிலளித்துள்ளார். ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர் அஜீத்தின் சொத்து மதிப்பு குறித்து பிரபல நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

அதாவது தல அஜித்தின் சொத்து மதிப்பு சுமார் 300 கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகின்றன.

இச்செய்தி தற்போது அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் சமூக வலைதளப்பக்கத்தில் ஷேர் செய்வது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இந்த செய்தி இருந்து வருகிறது.