உச்சக்கட்ட மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.! என்னாவா இருக்கும்.???

ajith-boney

தல அஜித்தின்(ajith) நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை(valimai) திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் ஊடகங்களுக்கு தன்னுடைய அலுவலங்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டதாக அறிவித்திருந்தார், அந்த சோதனையில் மூன்று ஊழியர்களுக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது.

அதனால் போனி கபூர்(boney kapoor) தனது மகள்களான ஜான்வி மற்றும் குஷி ஆகியோர்கள் தங்களைத் தனிமை படுத்திக் கொண்டார்கள், இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார் வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.

அதில் அவர் கூறியதாவது நானும் என்னுடைய மகள்களும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டோம் ஏனென்றால் எங்களது 3 ஊழியர்களுக்கு கொரனோ இருந்ததால் 14 நாட்கள் தங்களை தனிமை படுத்திகொண்டோம் இந்த நிலையில் அந்த மூன்று ஊழியர்களும் பூரணமாக குணம் அடைந்துள்ளார்கள்.

நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்கள் முடிவடைந்துள்ளது மேலும் நாங்கள் புதுமையை  தொடங்க எதிர்பார்க்கிறோம், அதுமட்டுமில்லாமல் குணமடைந்து வரும் அனைத்து மக்களையும் விரைவாக மீட்டெடுக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும் என கேட்டுக்கொள்கிறோம், மேலும் தன்னுடைய டுவிட்டரில் எங்களுக்கு மட்டுமல்ல மகாராஷ்ட்ரா மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள அனைவருக்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மும்பை காவல்துறை மாநில மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் உதவி ஆதரவுக்கு எனது குடும்பத்தினரும் நானும் நன்றியை கூற விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார்.