ajith : திரையுலகில் இருக்கும் பெரும்பாலான நடிகர், நடிகைகள் சினிமா தான் எல்லாம் என கருதி முழு நேரமாக சினிமாவையே போக்கஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் நடிகர் அஜித். சினிமாவுக்கு என ஒரு நேரத்தை ஒதுக்கிவிட்டு மீதி நேரங்களில் தனது ஆசையை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
அப்படி சமைப்பது, கார் – பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் காட்டி வந்த இவர் தற்பொழுது உலகையே பைக்கின் மூலம் சுற்ற திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து முடிக்க திட்டம் போட்டு இருக்கிறார்.
இப்படி நேரத்தை ஒதுக்கி ஓடுவதால் வாழ்வில் அவர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அஜித்.. எதிர்காலம் இப்படித் தான் இருக்கும் என கூறி உள்ளது.
மக்கள் இப்பொழுது பொழுது போக்கிற்காக வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே செலவழிக்க தயாராக இருக்கிறார்கள் அனைவரும் அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் உதாரணமாக கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள் முதலில் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் வந்தது பிறகு ஒருநாள் போட்டி வந்தது இப்பொழுது 20 ஓவர் போட்டி வந்திருக்கிறது.
எதிர்காலத்தில் 20 ஓவர் போட்டிகளோ அல்லது 10 ஓவர் போட்டிகள் தான் கிரிக்கெட்டில் பிரபலமாக இருக்கும். இது போன்ற பல மாற்றங்கள் நிகழும் எனக் கூறியிருந்தார் அந்த வீடியோவை தற்பொழுது நடிகர் அஜித் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர் மேலும் அஜித் சொன்னது இன்று நடந்து கொண்டிருக்கிறது எனவும் சொல்லி வருகின்றனர்.