அஜித் – ஷாலினி கல்யாணத்திற்கு தடையாக இருந்த பிரசாந்த் படம்.? ரகசியத்தை உடைத்த இயக்குனர்.!

ajith and shalini
ajith and shalini

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் சினிமாவுலகில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகன், மகள் உள்ளனர் இப்போது அஜித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து  வருகிறார்.

இப்படி இந்நிலையில் இயக்குனர் பேரரசு அஜித் ஷாலினி பெருமானும் குறித்து பேசி உள்ளார். அஜீத்தும், ஷாலினியும் காதலித்து வந்தனர் பிறகு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். திருமணம் செய்வதற்கு முன்பாக நடிகை ஷாலினி நடிக்க வேண்டிய படங்களில் நடித்து முடித்துவிடவேண்டுமென  திட்டமிட்டிருந்தார்.

அப்படி இவர் கமிட் ஆகிவிட்டு படங்களில் ஒன்றுதான் பிரியாத வாரம் இந்த படத்தில் ஹீரோவாக பிரசாந்த் நடித்த இருந்தார். இந்த படத்திற்காக மூன்று நாட்கள் மட்டும் ஷாலினி நடிக்க வேண்டிய ஷூட்டிங் பாக்கி இருந்தது.  ஆனால்  நடிகர் பிரசாந்த் தொடர்ந்து மற்ற படங்களில் நடிப்பதால் கால்ஷீட் கிடைக்காமல் போன காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிக்கொண்டே போனது.

இந்த ஷூட்டிங் தள்ளிப்போய் கொண்டிருந்த காரணத்தினால் ஷாலினி மூன்று முறை திருமண தேதியை மாற்றி மாற்றி வைத்துள்ளார் ஆனாலும் ஷூட்டிங் முடிந்த பாடில்லை ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஷாலினி தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார் அளித்து பின்னர் சூட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு அஜீத்தை திருமணம் செய்து கொண்டாராம்.

அஜித் திருமணம் 2000ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடக்க வேண்டியது இந்த படத்தால் அந்த திருமணமும் ஒரு வழியாக 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் முடிந்தது என இயக்குனர் பேரரசு கூறினார்.