நடிகர் அஜித் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக இருந்து வருகிறார் இதுவரை 59 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் 60 வது திரைப்படமான வலிமை படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய வைரஸ் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக வலிமை திரைப்படம் வெளியாகாது.
என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் ரசிகர்கள் கேட்கும் ஒரே ஒரு கேள்வி வலிமை படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பதுதான் தளர்வுகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பும் பட்சத்தில் ஜனவரி 27 ஆம் தேதி இப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வலிமை படம் வெளியானாலும் ஆகாவிட்டாலும் பிரச்சனை இல்லை அடுத்த கட்ட வேலையை செய்யலாம் என அஜித்தும், வினோத்தும் முடிவு எடுத்து உள்ளனர். இந்த படத்தின் பூஜையை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை போட இருந்தது ஆனால் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கிறது.
இதனால் திங்கட்கிழமை இந்த படத்தின் பூஜை போடப்படும் என தெரியவந்துள்ளது மேலும் இந்த படத்தின் கதையும் ஒரு வித்யாசமான கதை என்பதால் நடிகர் அஜித் தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறார். அஜித் தொடர்ந்து ஜிம்மிலேயே இருந்து உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறி வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் இப்பொழுது ஒரு புகைப்படம் வெளியாகி அது உண்மை என நிரூபித்து விட்டது. நடிகர் அஜித் ரசிகர் ஒருவர் உடன் இணைந்து லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அஜித் செம பிட்டாக மாஸாக இருக்கும் புகைப்படம்.