சூப்பர் ஹிட் படத்தை நழுவவிட்ட விஜய்.. கெட்டியாக பிடித்து நடித்த அஜித்.! AK கேரியரில் பெஸ்ட் படம் இதுதான்.!

ajith and vijay
ajith and vijay

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரண்டு ஹீரோக்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் அண்மை காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். இப்பொழுது கூட இருவரும் அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் AK 61.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது. அஜித் வெகு விரைவிலேயே இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார் என சொல்லப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிசியாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித், விஜய்.

ஒரு சில காரணங்களால் திரை வாழ்கையில் சில முக்கியமான படங்களை அஜித் விடுவதை விஜய் நடிப்பது விஜய் விடுவதை அஜித் தேர்ந்தெடுத்து நடிப்பதும் வழக்கம் அந்த வகையில் அகத்தியன் இயக்கத்தில் வெளியான காதல் கோட்டை திரைப்படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது விஜய் தானாம். அப்பொழுது கால் ஷீட் கிடைக்காத காரணத்தினால் நடிகர் விஜய்யால் நடிக்க முடியாமல் போனது.

கடைசியாக அந்த  கதை அஜித்திற்கு போனது அஜித் கமிட்டாகி நடித்தார் படம் சூப்பர் ஹிட் அஜித்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக காதல் கோட்டை படம் மாறியதாம். விஜய்க்கு வந்த வாய்ப்பை தட்டிப்பறித்து அஜித் தனக்கு ஒரு ஹிட் படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.