போலீஸ் உடையில் பேட்டிங் செய்தும், பந்து வீசியும் அசத்திய தல அஜித்.! வைரலாகும் புகைப்படம்

ajith
ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நம்ம தல இவரை அனைவரும் அல்டிமேட் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள், அதுமட்டுமில்லாமல் தலை என்றும் அழைப்பார்கள், தல அஜித் சினிமா துறை மட்டும் அல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார்.

அதேபோல் தல அஜித் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் அதிலும் கடந்த வருடம் வெளியாகிய விசுவாசம் நேர்கொண்டபார்வை ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று பட்டையை கிளப்பியது என்றும் கூறலாம், இந்த நிலையில் தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் valimai படத்தில் நடித்து வருகிறார்,

மேலும் அஜித் இளம்வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர், அதேபோல் பல கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார், இந்த நிலையில் தல அஜித் பறக்கும் ட்ரோன்களை உருவாக்கி சாதனை புரிந்தார் இந்த ட்ரோன் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தது. தல அஜித் பைக் ரேஸ் கார் ரேஸ் போட்டோகிராஃபர் மெக்கானிக் யுஏவி சிஸ்டம் அட்வைசர், ஹெலிகாப்டர் பைலட் டிரெய்னர், என பல துறைகளில் சாதனை புரிந்தார்.

mankatha-tamil360newz
mankatha-tamil360newz

இது சம்பந்தப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது அதேபோல் அஜித் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது அஜித் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியாகிய மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது,

அந்த திரைப்படம் அஜித்தின் 50வது திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார், வெங்கட் பிரபு படத்தை இயக்குகிறார் என்றாலே செம ஜாலியாக தான் இருக்கும் என நாம் அறிந்திருப்போம் அந்த வகையில் மங்காத்தா படப்பிடிப்பில் போலீஸ் உடையில் அஜித் பேட்டிங் செய்தும்  பவுலிங் போட்டும் அசத்தியுள்ளார் அந்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

mankatha-tamil360newz
mankatha-tamil360newz