அஜித், விஜய்க்கு போன் செய்து சஞ்சயைப் பற்றி நலம் விசாரித்தாரா.? விவரம் இதோ!!

ajith-and-vijay
ajith-and-vijay

Ajith and Vijay conversation about sanjai: சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் அஜீத்-விஜய். இவர்கள் இருவருக்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. சினிமாவில் இவர்கள் படம் வந்தாலே அன்று திருவிழா கோலமாக அமைவது பழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இவரது ரசிகர்களோ சண்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியல்ல இவர்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என பல பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.

அதிலும்கூட மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தை பற்றி பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது கொரோனா வைரசினால் உலகமே மிகுந்த கவலையான நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து, பள்ளி, கல்லூரி, வளாகங்கள் போன்றவை முடக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுபோல வெளிநாட்டவர்களும் அங்கேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மகன் சஞ்சய் அவர்கள் கனடா நாட்டில் படித்து வருகிறார். கொரோனா காரணமாக அவர் அங்கேயே இருக்கிறார். இதனால் விஜய் அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார். ஏனென்றால், அவர் அங்கு எப்படி இருக்கிறாரோ என்று சோகத்தில் இருக்கிறார்.

இந்த செய்தி ஊடகங்கள் மத்தியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த தல அஜித் அவர்கள் விஜய் அவர்களுக்கு போன் செய்து சஞ்சய் எப்படி இருக்கிறான் கனடாவில் சூழல் எப்படி இருக்கிறது என்று விஜயிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜய் அவர்கள் கூறியது பயப்படும்படி ஒன்றும் இல்லை என்றும் விஜய் கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

ajith and vijay
ajith and vijay

முன்னணி நடிகர்களான அஜித் விஜய் இவர்கள் இருவரும் அடிக்கடி போன் செய்வது வழக்கமானது என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.