தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் பிரதமர் மோடி,எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரிடம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி வந்தார்கள். இதனை அறிந்த அஜித் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் விரைவில் இப்படம் ரிலீசாகும் என்று கூறியுள்ளார்.
எனவே தல அஜித் சொன்னதை ஏற்று ரசிகர்கள் அமைதியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை நயன்தாரா அஜித் படத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அது வேறொன்றும் இல்லை நயன்தாரா தல அஜித்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் விசுவாசம் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாரா எனது முழு சம்பளத்தையும் கொடுத்தால் மட்டுமே அஜித்துடன் இணைந்து படத்தில் நடிப்பேன் என்று கூறினாராம்.
இந்த செய்தியை தற்போது பல நடிகர்,நடிகைகளின் மீது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியின் நேர்காணலின் போது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.