தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வறுகிறது . இந்த நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் துணிவு என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விளகிவிட்டார். இந்த நிலையில் தற்பொழுது அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் டைட்டில் விடாமுயற்சி என அஜித் பிறந்தநாளில் பட குழு அறிவித்தது.
இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். படத்தின் ஹீரோயின் யார் என்பதை விரைவில் பட குழு முடிவு செய்ய இருக்கிறது. அஜித் திரை வாழ்க்கையில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் பல வெற்றி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். அப்படி அஜித் நடிப்பில் வெளியாகிய மாபெரும் தோல்வி திரைப்படமாக அமைந்தது ஜி.
இந்த திரைப்படத்தை லிங்குசாமி அவர்கள் தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் கதையை அஜித் படத்தில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பு தான் கேட்டுள்ளார். கதையைக் கேட்டு முடித்தவுடன் அஜித் இந்த திரைப்படம் கண்டிப்பாக தோல்வியை அடையும் என கூறிவிட்டாராம். ஆனாலும் மறைந்த தயாரிப்பாளர் நிக் ஆர்ட் சக்கரவர்த்தி படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்திருந்தார் அதனால் அஜித் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஏனென்றால் மறைந்த நீக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் மற்றும் நெருங்கிய நண்பர் அந்த ஒரு காரணத்திற்காக அஜித் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் படமும் வெளியாகி எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த தகவல் தற்போது திடீரென சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.