நடிகர் அஜித் சமூக வலைத்தளத்தில் இணைவதாக ஒரு அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அறிக்கையில் என்னுடைய ரசிகர்களுக்கான ஒரு அறிக்கை நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைத்தளத்தில் இருந்தும் ஒதுங்கி இருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்து இருந்தேன், இதற்காக காரணங்களை பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன் இந்த நிலையில் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இதன் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எவ்வித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் இருந்தது, அதுமட்டுமில்லாமல் இந்த அறிக்கையில் அஜித்தின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து அஜித் தரப்பில் விசாரித்த பொழுது இது முகம் தெரியாத நபர் உருவாக்கிய அறிக்கை என கூறினார்கள் அதுமட்டுமில்லாமல் இதுவரை அறிக்கை தமிழில் கொடுத்ததில்லை எனவும், எங்களது அறிக்கை டி நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்து தான் வெளியிடப்படும் எனவும், இது ஒரு போலியான அறிக்கை எனவும் அஜித் தரப்பில் இருந்து கூறினார்கள்.
இதற்கு அஜித் தரப்பில் இருந்து அதிரடியான பதில் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள், இந்த அறிக்கையில் நடிகர் ஸ்ரீ அஜித் குமார் அவர்கள் சட்ட ஆலோசகர்கள் நாங்கள், (இனிமேல் அவர் எங்கள் கட்சி காரராக கருதப்படுகிறார்). மேலும் இந்த நோட்டீசை அவரது அறிவுறுத்தலின் பெயரிலும் மற்றும் அவரது சார்பாகவும் நாங்கள் வெளியிடுகிறோம்.
மார்ச் 6, 2020 ஆம் தேதியில் அஜித் குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரபூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது போல் உள்ளது. அந்த கடிதம் அஜித் குமார் அவர்களின் பெயருடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டது, மேலும் அவரது போலியான கையப்பத்துடன் இணைத்து இருப்பதை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது.
அந்த கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கள் யாவும் மறுக்கப்படுகின்றன எனவும் திட்டவட்டமாக தெரிவிக்க அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார், அஜித் குமார் அவர்கள் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் தனக்கு எந்த ஒரு சமூக ஊடக கணக்குகளும் இல்லை என்றும் சமூக ஊடகங்களின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் கீழ்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.
a)அவருக்கு அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை, B)அவர் எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை, C)சமூக ஊடகங்களில் எந்த ஒரு கருத்தையும் மற்றும் எந்த ஒரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை. D) மீண்டும் சமூக ஊடங்களில் சேரப் போவதாக கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை.
இறுதியாக தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியை கண்டு பிடிப்பதற்கு தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.