தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தல அஜித். தல அஜித் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து அதன் வழியிலேயே வெற்றிநடை போட்டு வருகிறார். ஒரு காலகட்டத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்தவர் அஜித்.
ஆனால் சமீபகாலமாக இவர் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதால் இந்த திரைப்படம் மே மாதம் திரைக்கு வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இதெல்லாம் ஒருபுறமிருக்க தயாரிப்பாளர் ஒருவர் அஜித்தை அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வைக்க வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறாராம்.
இந்த நிலையில் அஜித்தின் திரைப்படம் ஹிட் அடித்தாலும் சரி இல்லை என்றாலும் சரி படத்திற்கு படம் பிரபல தயாரிப்பாளர் கோடிகளை ஏற்றி கொடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார் இதனை தொடர்ந்து வலிமை திரைப்படத்தையும் பொனிகபூர் தான் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிக்க ஆசைப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் வினோத் தான் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும். இன்னும் இரண்டு மூன்று திரைப்படங்களை போனிகபூர் அஜித்தை வைத்து எடுப்பதற்கு ஆசைப்படுவதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
எது எப்படியோ அஜித்தின் திரைப்படம் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தின் அப்டேட் ஏதாவது வெளியிடுங்கள் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.