அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள் ஏனென்றால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதாரத்தை வெளிப்படுத்தும் திரைப்படமாக அமைந்துள்ளது அதனால் இந்த திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது அஜித் அடுத்த திரைப்படமான AK 62 திரைப்படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது. இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பில் ரசிகர்களிடம் அதிகாரத்துள்ளது இந்த நிலையில் அஜித் அடுத்த திரைப்படத்திற்கு கதை கேட்க துவங்கியுள்ளார்.
இந்த நிலையில் அஜித் மீண்டும் தன்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான இயக்குனக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அவர் வேறு யாரும் கிடையாது விஷ்ணுவர்தான் இவர் 2003 ஆம் ஆண்டு குறும்பு என்ற திரைப்படத்தை இயக்கினார் அதனைத் தொடர்ந்து அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார் 2007 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து பில்லா திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் 2013 ஆம் ஆண்டு மீண்டும் அஜித்தை வைத்து ஆரம்பம் என்ற திரைப்படத்தை இயக்கினார் இப்படி விஷ்ணு வரத்தான் அஜித்துடன் இணைந்த திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது இந்த நிலையில் மீண்டும் விஷ்ணு வரதனுக்கு அஜித் வாய்ப்பு கொடுக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்தை விசுவாசம் திரைப்படத்தை தயாரித்த சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.