2022 எப்படி நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக இருந்ததோ அதேபோல 2023 நல்ல ஆண்டாக இருக்க உள்ளது ஆம் ஆரம்பத்திலேயே அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.. இதை பெரிய அளவில் கொண்டாட ரசிகர்களும் ரெடியாக காத்துக் கொண்டிருக்கின்றனர்
குறிப்பாக அஜித்தின் துணிவு திரைப்படம் பணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது மேலும் அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் இவருடன் இணைந்து துணிவு படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து உள்ளனர். இதுவரை இந்த படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர் பாடல் டிரைலர் என அனைத்தும் வேற லெவலில் இருந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ப்ரமோஷன் வேலைகளும் படும் ஜோராக பண்ணி வருகிறது ஆம் இதுவரை இல்லாத அளவிற்கு வேற லெவலில் பட குழு பிரமோஷன் செய்து வருகிறது இதை வைத்து பார்க்கும் பொழுதே தெரிகிறது துணிவு திரைப்படம் செம மாசாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல நடிகர் நடிகைகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வந்தனர் அந்த வகையில் நடிகர் அஜித்குமார் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை துல்லலாட்டம் போட வைத்துள்ளது
அதிலும் குறிப்பாக அஜித்தின் மகள் ஹீரோயின் போல செம்ம அழகாக இருக்கிறார் எனக்கூறி லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை..