விஜய்யை ஓவர்டேக் செய்ய வேண்டுமென்றால் அஜித்திற்கு ரசிகர்கள் தேவை.! பிரபலம் ஒரே போடு..

ajith vijay
ajith vijay

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் மற்றும் அஜீத் சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து இருவரும் போட்டியாளராக கருதப்படுகிறார்கள் அதேபோல் அஜித் மற்றும் விஜய் இருவரும் ரசிகர்கள் பட்டாளத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் கிடையாது அந்தளவு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்கள்.

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள அஜித் விஜய் வலை தளத்திலும் சரி திரையரங்கில் படம் வெளியானதும் சரி ஒருவருக்கு ஒருவர் இவர்களே. அந்த அளவு விஜய் மற்றும் அஜித்  படங்களை மாறி மாறி கொண்டாடுவார்கள். அதேபோல் அஜித் மற்றும் விஜய்க்கு வெளியான புதிய திரைப்படங்கள் வசூலிலும் மாறி மாறி சாதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்க்கு கடைசியாக வெளியான திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் விஜய் விஜய்சேதுபதி மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன் என பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது.

அதேபோல் அஜித்திற்கு நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக வெளியானது மேலும் இந்த வலிமை திரைபடம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் பெரிய சாதனை படைத்தது.

இந்தநிலையில் அஜித் மற்றும் விஜய் குறித்து பிரபல விமர்சகர் அந்தனன் பேசிய பொழுது விஜயும் அஜித்தும் சமகாலத்தில் வளர்ந்தவர்கள் தான் ஆனால் இப்பொழுது விஜய் ஒரு ஸ்டெப் மேலே இருக்கிறார் சம்பள விஷயத்திலும் சரி ரசிகர்களை அரவணைப்பிலும் சரி இது போட்டி நிறைந்த உலகம் என்னதான் எனக்கு இருக்கும் ரசிகர்கள் போதும் எனக்கு கிடைக்கும் சம்பளம் போதும் என இருந்தாலும் அஜித் அவரது போட்டியாளர் விஜய்தான்.

விஜய் சம்பந்தப்பட்ட டீசர் டிரைலர் ஏதாவது ஒன்று வெளியான அன்றே அஜித் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் வெளியாகி டிரெண்டிங்கில் கொண்டு வருகிறார்கள் அப்படி என்றால் விஜய் தன்னுடைய போட்டியாளர் தான் நான் உன்னை விடமாட்டேன் என இறுதியாக நீயா நானா என்று பார்க்கலாம் என சொல்ல வேண்டுமென்றால் அஜித் ரசிகர்கள் பக்கத்தில் அஜித் நிற்க வேண்டும் என விமர்சகர் அந்தனன் பேசியுள்ளார். இந்த தகவல் இருதரப்பு ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.