தல அஜித் மற்றும் விக்ரம் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் இவர்கள் இருவருமே தற்பொழுது தனித்தனி திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அஜித் வலிமை திரைப்படத்திலும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்கள்.
விக்ரம் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது கிடையாது. விக்ரம் தன்னுடைய படத்தில் ஏதாவது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது உடலை வருத்தி கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் அதனால்தான் இன்றுவரை சினிமாவில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை நிலைநாட்டி வருகிறார்.
அதேபோல் தற்பொழுது அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அஜித் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் உல்லாசம் இந்த திரைப்படம் 1997 ஆம் ஆண்டு ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்த திரைப்படத்தில் அஜித், விக்ரம், ரகுவரன், மகேஸ்வரி, எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் வெற்றிக்கனியை ருசிக்க வில்லை.
இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார். அதாவது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாலிபம் வாழச் சொல்லும் என்ற பாடலை நடிகை சுருதிஹாசன் தான் பாடி உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களிடையே மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்