உடனே இந்த சீனை மாற்றுங்கள் எனக் கூறிய அஜித்.! பின்பு மரண ஹிட் அடித்த திரைப்படம் இயக்குனர் ஒப்பன் டாக்.!

ajith-kumar
ajith-kumar

தல அஜித் இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு முன்பு பல வெற்றி திரைப்படங்களையும் தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார், அதில் தோல்வி திரைப்படங்கள் அதிகமாக இருந்தாலும் தன்னுடைய தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் அதனை அனைத்தையும் வெற்றி படியாக மாற்றியவர்.

இன்று அஜித்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது, இந்நிலையில் 24 வருடங்களுக்கு முன்பு அஜித் மற்றும் இயக்குனர் அகத்தியன் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘காதல் கோட்டை’. இந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் தேவயானி நடித்திருப்பார்கள், படத்தில் அஜித் தேவயானி பார்க்காமலேயே காதலித்து கொள்வார்கள் கடைசியில் அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது, அதுமட்டுமல்லாமல் பல விருதுகளையும் தட்டிச் சென்றது, காதல் கோட்டை திரைப்படம் கிட்டத்தட்ட 170 நாட்களை தாண்டி சில்வர் ஜூப்ளி படமாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் அகத்தியன் இதற்கு முன்னதாக அஜித்தை வைத்து வான்மதி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று 100 நாட்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.

இந்தநிலையில் அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கிய இயக்குனராக அகத்தியன் இருக்கிறார். அவர் சமீபததில் ஒரு பேட்டி ஒன்றில் அஜித்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார், அஜித் தலைசிறந்த மனிதர் படப்பிடிப்பிறகு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவார், தான் ஒரு டாப் ஹீரோ என்ற தலைக்கனம் இல்லாதவர், அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்.

இந்த மாதிரி காதல் கோட்டை திரைப்படத்தில் ஒரு சில திருத்தங்களை அஜித்குமார் சொன்னதாக பிரபல இயக்குனர் அகத்தியன் கூறியுள்ளார், அஜித் கூறிய அந்த சின்ன திருத்தங்கள் தான் படத்தின் வெற்றிக்கு காரணம் எனவும் இயக்குனர் அகத்தியன் கூறியுள்ளார். தற்பொழுது இந்த செய்தி அஜீத ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் தல எப்பொழுதும் தலதான் என புகழ்ந்து வருகிறார்கள்.