தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் ஆரம்பத்தில் மலையாளத்தில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து அறிமுகமானவர் பின்பு ஒரு கட்டத்தில் தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவான ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து என்ட்ரி கொடுத்தார்.
முதல் படத்திலேயே அவரது எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதால் இரண்டாவது படமாக ரஜினியுடன் கைகோர்த்து சந்திரமுகி படத்தில் நடித்தார். இவர்களை தொடர்ந்து அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்
இப்படி சினிமாவில் சிறப்பாக ஜொலித்து வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை சில ஆண்டுகளாக காதலித்து இந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக தனது வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் இதோடு மட்டுமல்லாமல் வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்று எடுத்துள்ளனர். தற்போதும் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்றி பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நயன்தாரா சினிமாவில் நடிப்பதை தாண்டி படங்களை இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆம் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான ஆரம்பம் திரைப்படத்தில் அஜித், நயன்தாரா, டாப்சி, ராணா, ஆர்யா போன்ற பலரும் நடித்திருந்தனர். அந்த படத்தின் ஷூட்டிங் போது புல்லர் புரூப் ஜாக்கெட்டுகளை உதவி இயக்குனர்கள் கொண்டு வர தாமதப்படுத்தியதால்..
இயக்குனர் விஷ்ணுவரதன் கோபப்பட்டு அவர்களை வெளியே போக சொல்லிவிட்டார். அப்போது நயன்தாரா இன்று எனக்கு கால் சீட் இல்லை நான் கிளாக் பிடிக்கிறேன் என உதவி இயக்குனர் வேலையை செய்து இருக்கிறார் மற்றும் ஷூட்டிங் நடக்கும்போது பலர் பேசிக் கொண்டிருந்ததால் டென்ஷன் ஆனா நயன்தாரா சைலன்ட் என கத்தி உள்ளார்.