தமிழ் சினிமாவில் முக்கியமாக பார்க்கப்படும் பிரபலங்கள் என்றால் அஜித் மற்றும் விஜய் தான் இவர்கள் படத்திற்கு ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்கள் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் படங்கள் வியாபார ரீதியாக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து 1995 ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்கள்.
அதன்பிறகு இருவரும் தனித்தனியாக படங்களில் நடிக்க ஆரம்பித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்கள் திரையில் கடும்போட்டி நிலவி வந்தாலும் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதேபோல் விஜய்-அஜித் இருவரும் நல்ல விஷயங்களை கூறுவதும் அஜித் பற்றி நல்ல விஷயங்களை விஜய் கூறுவதும் விஜய் பற்றி நல்ல விஷயங்களை அஜித் கூறுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
அப்படிதான் அஜீத்தின் ஒரு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததற்கு முக்கிய பிரபலத்தை கூப்பிட்டு விருந்து வைத்ததாக தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
இந்த திரைப்படம் அஜித்திற்கு 50வது திரைப்படமாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. மங்காத்தா திரைப்படத்தில் அஜித் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார் என்று கூறலாம்.
இந்த நிலையில் மங்காத்தா திரை படம் வெற்றி பெற்றதால் இயக்குனர் வெங்கட் பிரபுவை விஜய் தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளாராம் இந்த விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.