சென்னையில் பல திரையரங்குகளில் அஜித் திரைப்படம்.!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

ajith
ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் தமிழக அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். அது மட்டுமல்லாமல் இன்னும் பல திறமைகளை கொண்டவராக விளங்குகிறார். எனவே அவருடைய ரசிகர்கள் அஜித் தான் எங்கள் ரோல் மாடல் என்று கூறி அஜித்தை பெருமை படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித் வலிமை திரைப்படத்தின் பற்றி எந்த அப்டேட்டும் வராத காரணத்தினால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் மைதானம்,அரசியல் கூட்டம் என்று எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள் . ஆனால் படக்குழுவினர்கள்  படம் ரிலீசாகும் வரை காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பில்லா திரைப்படம் திரையரங்குகளில் திரையிட முடிவு செய்துள்ளார்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் தற்பொழுது நாளை( மார்ச் 12)எந்தெந்த திரையரங்குகளில் பில்லா திரைப்படம் ரிலீசாக உள்ளது என்ற லிஸ்ட்டை தற்பொழுது ட்விட்டரில் வைரலாகி வருகிறார்கள். இதோ அந்த லிஸ்ட்.