அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படத்தில் சிட்டிசன் திரைப்படம் ஒன்று இத்திரைப்படம் வெளியாகி சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஆனாலும் இன்றுவரை இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
குறிப்பிட்டு சொல்ல போனால் அஜித்தின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் என்றால் இந்த திரைப்படத்தையும் சொல்லலாம் ஏனெனில் இத்திரைப்படத்தில் தல அஜித் முழுக்க முழுக்க தன்னுடைய கதாபாத்திரத்திற்காக தன்னையே மாற்றி நடித்து இருப்பார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை கடந்த 2006ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சிட்டிசன் சுப்பையா என்பவர்தான் இயக்கி உள்ளார் மேலும் இத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா அவர்கள் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை எஸ் எஸ் சக்கரவர்த்தி தான் தயாரித்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாடகி யாக வலம் வந்த வசுந்தரா தாஸ் என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மேலும் நக்மாவும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த வகையில் நக்மா கூறும் நாயர் என்ற வசனம் மீம்ஸ் கிரியேட்டர் வேலைக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
இவ்வாறு பல பிரபலங்கள் நடித்து மாபெரும் ஹிட்டுக்கொடுத்த இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டு என்று வருத்தப்படும் நடிகைதான் சமீரா ரெட்டி இவருக்கு தற்போது 42 வயது ஆகிவிட்டது. முதல் முதலாக சிட்டிசன் திரைப் படத்தில் நடிப்பதற்காக இவரை தான் அணுகினாராம்.
ஆனால் நமது சமீரா ரெட்டி அப்போது ஹிந்தியில் மிக பிஸியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்ததன் காரணமாக அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம் அதை தற்போது பேட்டி ஒன்றில் கூறி வருத்தப்பட்டுள்ளார்.