அஜீத் பட நடிகைக்கு இதய கோளாறுடன் பிறந்த மகன்!! நடிகையின் உறுக்கமான பதிவு.

kanihason-tamil360newz

ajith movie actress sad about his son born with heart problem: நடிகை கனிகா இவர் தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அதனை தொடர்ந்து எதிரே, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு  போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். மேலும் இதை தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே தொகுப்பாளராகவும் பணியாற்றினார். மேலும் இவர் நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சில படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வந்தார். சச்சின் ஜெனிலியா, அன்னியன் சதா மற்றும் சிவாஜி ஸ்ரேயா சரண் போன்றவை குறிப்பிடத் தக்கதாகும். மேலும் அதுமட்டுமிலலாமல் சில படங்களில் பின்னணி பாடகராகவும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2008 ஆம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய் ரிஷி என்று என்ற மகனும் உள்ளனர். சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கனிகா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தற்போது இவர் வீட்டில் இருந்த படியே ஒரு சாட் பிலிம் இயக்கியிருக்கிறார் அந்த படத்தின் போஸ்டரை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். அதனைதொடர்ந்து தனது திருமணத்தின் போது தாலி கட்டும்போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மற்றவர்களையும் பதிவிடும் படி கூறியிருந்தார். அந்தவகையில் தற்போது தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தில் பதிவிட்டு அதில் தனது குழந்தை பற்றி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“ஆமாம்.. என் குழந்தை மிக பெரிதாக இருந்தது. அளவுக்கு அதிகமான எடை கொண்ட குழந்தை என்பதால் நான் கர்பமாக இருந்தபோது வயிறு மிக பெரிதாக இருந்தது. நான் அதை பெருமையாக தான் காட்டினேன். மற்ற பெண்களை போல பிரசவத்திற்கு பிறகு திரும்ப பழைய நிலைக்கு வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் என குழந்தை பிறந்தவுடன் அவனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிசயங்களும் நடக்கும், என் குழந்தை உயிர்பிழைத்தது. அவன் வாழ்வதை தேர்ந்தெடுத்தான்.”

“இந்த பதிவு அது பற்றியது இல்லை.. நான் எப்படி மீண்டும் முன்பு இருந்தது போலவே மாறினேன் என்பது பற்றித்தான் இந்த பதிவு. நானா ஒரே ஒரு எளிமையாக விதியை தான் கடைபிடித்தேன். உன் வாழ்க்கை, உன் உடல், உன் உரிமை. இதுநாள் வரை என தோற்றத்தை பற்றியோ, குழந்தை வளர்ப்பது பற்றியோ யாராவது விமர்சனம் கூறினால் அது பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை. நான் என்ன அடைய விரும்புகிறேன் என்பதை நோக்கி அமைதியாக உழைத்தேன்.”

“இப்போதும் கூட நான் ஏன் பிட்னெஸ்காக அதிகம் கவனம் செலுத்துகிறேன் என நினைக்கலாம். என்னுடைய கெரியருக்காக தான் இப்படி செய்கிறேன் என்றும் நீங்கள் பலர் எண்ணலாம். ஆனால் அதற்கெல்லாம் பதில் ’நோ’ தான். நான் எனக்ககத்தான் இதை செய்கிறேன். ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக நான் செய்யும் முதலீடு இது.”

“அதனால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். ஃபிட்டாக இருங்கள். ஆரோகியமான எதிர்காலம் தற்போது உங்கள் கையில் தான் இருக்கிறது. ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக செலவிட்டால் போதும். நீங்கள் கண்டிப்பாக அதற்கு தகுதியானவர், அதனால் நல்ல ஆரோக்கியத்தை உங்களுக்கே பரிசளித்துக் கொள்ளுங்கள். என்னால் செய்ய முடியும் என்றால் உங்களால் செய்ய முடியாத என்ன?” என கனிகா கேட்டுள்ளார். இதுவே அவரின் இந்த மாற்றத்திற்கான காரணமாம்.

kaniha-tamil360newz
kaniha-tamil360newz