தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட பொழுது பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர்கள் அறிவித்திருந்தார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் வருகின்ற 2023ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ரிலீஸ்சாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் இந்த வருட தீபாவளி அன்று ரிலீஸ் ஆகலாம் என பட குழுவினர்கள் அறிவித்திருந்த நிலையில் படபிடிப்பு சற்று தாமதமான காரணத்தினால் ரிலீஸ் செய்ய குழுவினர்கள் தற்போது வெயிட் பண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதன் காரணமாக அஜித்தும் தன்னுடைய படத்தினை பொங்கலுக்கு வெளியிடலாம் என பிடிவாதமாக கூறியுள்ளாராம். எனவே வாரிசு, துணிவு இந்த இரண்டு திரைப்படங்களும் பொங்கல் அன்று ரிலீஸ்சாக உள்ளது.
8 வருடங்கள் கழித்து தல, தளபதி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக தற்பொழுது துணிவு பட குழு உறுப்பினர்களும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் இவ்வாறு நடிகர் விஜய் தன்னுடைய வாரிசு திரைப்படத்திற்கு போட்டியாக எந்த திரைப்படமும் வெளிவராது எனவே வசூல் வேட்டையை நடத்தலாம் என திட்டமிட்டு இருந்தார்.
இதற்கு நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் ஆப்பு வைத்து இருக்கிறது இந்நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு படம் வாரிசு படத்துடன் அதே நாளில் ரிலீஸ் ஆவதால் விஜய்யின் படத்திற்கு திரையரங்கு கூட கிடைக்கவில்லை என பல குழுவினர்கள் வருத்தத்தில் இருந்து வருகிறார்களாம். அந்த வகையில் தமிழகத்தில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
தமிழகத்தில் மட்டுமே 70 சதவீதம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் விஜயின் திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என தெரியாமல் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.