ஜோதிகாவால் அமிதாப்பட்சனுடன் நடிக்க இருந்த வாய்ப்பை தவறவிட்ட அஜித்.!

ajith-jothika
ajith-jothika

ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வந்து திருமணத்திற்கு பிறகு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை தான் ஜோதிகா. இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்து வந்தார்.

பெரும்பாலும் காதல் கதையை மையமாக வைத்திருக்கும் திரைப்படங்கள் தான் நடித்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்கள் நடித்து வருகிறார். மேலும் எந்தவொரு நடிகருக்கும் ஜோடியாக நடிக்காமல் இருந்து வருகிறார். அந்த வகையில் கமல், ரஜினியுடன் சேர்ந்து நடித்து வந்த இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் உடன் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்துள்ளது ஆனால் அதனை அவர் நழுவ விட்டிருக்கிறார்.

அதாவது நடிகர் அஜித், அமிதாபச்சன் மற்றும் ஜோதிகா இவர்களின் கூட்டணியில் தமிழில் ஒரு திரைப்படம் உருவாகி இருந்திருக்கிறது. அவ்ப்பொழுது நடிகை ஜோதிகா தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி,கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் மேலும் பல முக்கியமான நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் அஜித்துடன் இணைந்து வாலி, முகவரி, பூவெல்லாம் உன் வாசம் என மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தார். இவ்வாறு அப்பொழுது அஜித்தும் தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னை தேடி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் வாலி திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் பெரிதாக சண்டை காட்சிகள் இல்லை என்றாலும் தனது சிறந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் 1999ஆம் ஆண்டு ஆனந்த பூங்காற்றே திரைப்படத்திற்கு பிறகு அமர்க்களம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தினை சரண் இயக்கியிருந்தார் மேலும் ஷாலினி, ரகுவரன், நாசர், அம்பிகா,வினு சக்கரவர்த்தி, வையாபுரி உள்ளிட்டவர்களும் நடித்திருந்தார்கள். இவ்வாறு தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முதன்முறையாக ஆக்சன் திரைப்படத்தில் நடித்து திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மேலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அஜித்திற்கு ஒரே நாளில் 25 ஆயிரம் ரசிகர் மன்றம் உருவானதாக இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் இந்த படத்தில் ஷாலினி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா தான் அப்பொழுது சூர்யாவுடன் இணைந்த இவர் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாக இருந்ததால் அவரால் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய் உள்ளது இந்த திரைப்படத்தில் கதாநாயகியின் அப்பாவாக துளசிதாஸ் கேரக்டரில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர் ஆனால் அதுவும் சில காரணங்களால் முடியாமல் போய் உள்ளது.

அதன் பிறகு இந்த கேரக்டரில் ரகுவரன் நடித்திருந்தார் இந்த நேரத்தில் அமர்க்களம் திரைப்படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அஜித் ஷாலினிகிடையே எப்படி காதல் ஏற்பட்டதோ அதேபோல் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் இணைந்து நடித்த சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து வந்தார்கள் தற்பொழுது இவர்கள் அதன் பிறகு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.