தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் மிகப்பெரிய நடிகர் என்றால் அவர்களில் அஜித்-விஜய் இருப்பார்கள், இவர்கள் இருவரும் நடித்து வெளியாகும் திரைப் படத்தின் சாதனையை ஒருவரை ஒருவர் முறியடித்துக் கொள்வார்கள்.
அதேபோல் அஜித் விஜய்க்கு ஏதாவது ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அன்று திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்த அளவு பாலபிஷேகம் கட்டவுட், மேளதாளம், வெடி என அமர்க்களப் படுத்துவார்கள்.
இந்தநிலையில் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது ஆனால் ஊரடங்கு காரணமாக திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய கொண்டே போகிறது அதேபோல் அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை பெற்றுள்ளது.
அஜித் விஜய் இருவருமே பல திரைப்படங்களை தவறவிட்டு உள்ளார்கள், இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் அஜித் தவறவிட்ட திரைப்படத்தில் விஜய் நடித்து இருப்பார் அதைபோல் விஜய் தவறவிட்ட திரைப்படத்தில் அஜித் நடித்திருப்பார்.
அப்படிதான் அஜித் நடிக்கவிருந்த திரைப்படத்தில் விஜய் நடித்த மெகா ஹிட் ஆகியுள்ளது, விஜய் திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த திரைப்படம் லவ் டுடே, இந்த திரைப்படம் முதன்முதலில் அஜித்திற்கு தான் வந்ததாம்.
ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அஜித் நடிக்க முடியாமல் போனது பின்பு விஜய் நடித்து மாபெரும் ஹிட்டடித்தது. விஜய் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய திரைப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.