நடிகர் அஜித்குமாருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருக்கு நிறைய வாய்ப்புகளை கொடுப்பார் அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் ஹச். வினோத்துக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து அசத்தி வருகிறார். வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தையும் ஹச்.வினோத் இயக்கி வருகிறார்.
ஏகே 61 படத்தை போனி கபூர் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இறுதி கட்டப்பட பிடிப்பு ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர்.
மற்றும் இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி ஷங்கர், அஜய், ஜான் கொக்கேன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து அஜித் தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. தற்பொழுது கூட நடிகர் அஜித்குமார் பிரபல தயாரிப்பாளரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரனை தான் அஜித் சந்தித்துள்ளார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் AK 62 ரெடியாகுவது உறுதி எனக்கூறி லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ நடிகர் அஜித் செம்ம மாஸாக ஸ்டைலாக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..