மீண்டும் ரசிகர்களை சந்தித்த அஜித் – இணையதளத்தை அலறவிடும் புதிய வீடியோ..

ajith
ajith

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். இவர் அண்மைக்காலமாக ஆக்சன் மற்றும் சமூக அக்கறை கலந்த படங்களை கொடுத்து வருகிறார் அந்த படங்களும் ஒவ்வொன்றும் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த படம் வலிமை.

படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ஹச். வினோத்துடன் கைகோர்த்து நடத்துவரும் திரைப்படம் துணிவு இந்த படம் அஜித்திற்கு 61வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் முழுக்க முழுக்க பேங்கராபரியை மையமாக வைத்து படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர்.. மற்றும் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துள்ளது. அடுத்ததாக ரசிகர்களுக்காக புதிய புதிய அப்டேட்டுகளை கொடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன அதுபோல தற்போது இவர் கேரகனுக்குள் இருந்து வெளியே வந்து தனது ரசிகர்களை சந்தித்து.

கைகாட்டி, தம் சப் செய்து பின்னர் வணக்கம் தெரிவித்தார் அந்த வீடியோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. வீடியோவை ரசிகர்களும் இணையதள பக்கத்தில் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர் இதோ நடிகர் அஜித்குமார் ரசிகர்களை சந்தித்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோ நீங்களே பாருங்கள்..