Ajith Mass Video : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து இருக்கிறார். ஆனால் அவருடைய ரசிகர்கள் அதை நினைத்து வருத்தப்பட்டது கிடையாது அஜித்தை ஸ்கிரீனில் பார்த்தால் போதும் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி துணிவு படத்தில் அஜித் மாஸ் காட்டியதை தொடர்ந்து விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் லைகா தயாரிக்க மகிழ் திருமேனி இயக்க உள்ளார் படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன. படப்பிடிப்பு முழுக்க முழுக்க துபாய், அபுதாபியில் தான் ஷூட்டிங் நடக்கும் என தெரிய வருகிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கையில் விடாமுயற்சி படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என கிசுகிசுக்கபடுகிறது. மேலும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஹீமா குரேஷி, அர்ஜுன் தாஸ், அர்ஜுன், சஞ்சய் தத் போன்றவர்களும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.
நேற்று தான் அஜித் சென்னை வந்தார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலானதை தொடர்ந்து இன்று அஜித் கோட் சூட்டில் செம்ம அழகாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல உங்க புன்னகை மட்டுமே போதும்..
எங்களை மகிழ்விக்க எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் சிலர் உங்களுடைய விடாமுயற்சி படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதோ அஜித் கோட் சூட்டில் செம்ம சூப்பராக இருக்கும் அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்..
#ajithkumarworldtour #VidaaMuyarchi #TamilCinema pic.twitter.com/s7BM19glqn
— tamil360newz (@tamil360newz) September 23, 2023