நடிகர் அஜித்குமார் ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் இப்பொழுது சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ணுவதால் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்தி உள்ளார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் வசூலை வெற்றி கண்டது.
அதனைத் தொடர்ந்து தனது 62 வது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார் லைகா நிறுவனம் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார். வெகு விரைவிலேயே விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என பெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகை சீதா அஜித் குறித்து பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அஜித் அவரது வீட்டில் இருக்கும் பொருள்கள் பழசு ஆனதும் புது பொருள்கள் வாங்கும் பொழுது அந்த பழைய பொருளை அவரது வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொடுத்து விடுவார் என கூறினார்
மேலும் பேசிய அவர் ஆஞ்சநேயா படத்தில் அஜித்திற்கு அம்மாவாக சீதா நடித்தார். அந்தப் படத்தில் அவர் இறந்தது போன்ற ஒரு காட்சி ஒன்று வரும் அப்பொழுது அவரை தூக்கி வைத்துக்கொண்டு அஜித் அழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது அந்த காட்சியில் சீதாவை தூக்கி வைத்துக்கொண்டு அஜித் அழுதார்.
அதை பார்த்த சீதாவும் அப்போது கண்ணீர் விட்டு அழுதாராம்.. ஆனால் அது அந்தப் படத்தில் தெரியாது போல அஜித் மேனேஜ் செய்துவிட்டார் பிறகு படப்பிடிப்பு முடிந்ததும் ஏன் அழுதீர்கள் என சீதாவிடம் அஜித் கேட்டுள்ளார் அதற்கு சீதா நீங்கள் அழுததை பார்த்து எனக்கும் அழுகை வந்துவிட்டது என கூறி உள்ளார் அவ்வளவு சிறப்பாக அஜித் நடித்திருப்பதை அந்த பேட்டியில் கூறியிருந்தார்.