ஏகே 62 படத்திற்காக அஜித் செய்யும் மிகப் பெரிய தியாகம்.. எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான்.

ajith
ajith

நடிகர் அஜித்குமார் வருடத்திற்கு ஒரு தரமான படத்தைக் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரு படங்களை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்தது.

துணிவு படம் பேங்க் கொள்ளை மோசடி போன்றவற்றை மையமாக வைத்து உருவாகி வெளிவந்தது அதனால் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இதைத்தொடர்ந்து அஜித் அவரது அடுத்த படமான ஏ கே 62 படத்திற்காக முன்னதாக இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இடம் ஒரு ஒன் லைன் ஸ்டோரியை கேட்டுவிட்டு ஓகே செய்துள்ளார்.

இந்த படத்தை தயாரிக்க இருந்த லைகா ப்ரொடக்ஷன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் சொன்ன முழு கதை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி அளிக்காததால் இயக்குனரை மாற்றி விட்டனர் அதன்படி அஜித்தின் அடுத்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்க உள்ளார்.

இவர் கூறிய கதை லைகா நிறுவனத்திற்கு பிடித்துப் போகவே கதையை விரிவுபடுத்த சொல்லி உள்ளனர். இந்த படத்தின் முழு கதை திரைக்கதை என எல்லாம் தயாரான பின் அஜித் கதையை கேட்டுவிட்டு பின்பு அறிவிப்பை வெளியிட உள்ளது தயாரிப்பு நிறுவனம். மேலும் அஜித் தனக்காக அவசர அவசரமாக கதையை தயார் செய்ய வேண்டாம்,

பொறுமையாக கதையை தயார் செய்து முடித்துவிட்டு பின்பு படப்பிடிப்பிற்கு செல்லலாம் எனவும் கூறியுள்ளாராம். இந்த படத்தின் கதையை கேட்பதற்காக அஜித் உலகம் முழுவதும் பைக் ரைடு செல்ல வேண்டாம் என தனது கனவை தள்ளி வைத்துள்ளாராம்.