Ajith vidaamuyarchi : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி தொடங்கி சிவகார்த்திகேயன் வரை பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் நடிக்க போவதாக உடனே செய்திகள் எல்லாம் வெளியாகின.
ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதை சரியில்லாததால் அவரை நீக்கி விட்டு மகிழ் திருமேனியிடம் தஞ்சமடைந்தது படத்தின் டைட்டில் இயக்குனர் எல்லாவற்றையும் அறிவுத்திருந்தாலும் அதன் பிறகு இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் எந்த ஒரு சரியான அப்டேட்டும் வெளிவராததால் பலரும் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டது.
விக்னேஷ் சிவன் நிலைமை தான் மகிழ் திருமேனிக்கும் என கூறி கமெண்ட் அடித்து பரப்பினர் இதனால் மகிழ்திருமேனிக்கும் சற்று பயம் வந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் சுபாஷ்கரன் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார் அப்பொழுது அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் வேண்டும் என கத்தியினர்.
அதனை எடுத்து பேசிய சுபாஷ்கரன் அஜித்தின் விடாமுயற்சி படம் எங்களுக்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் வெகு விரைவிலயே ஷூட்டிங் தொடங்கும் என கூறினார். அதன் பிறகு சமூக வலைதள பக்கங்களில் இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் தான் அதிகமாக வெளிவந்த வண்ணமே இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு தான் அஜித்தும் சென்னை திரும்பினார்.
அதன் பிறகு இவர் கோர்ட் சூட்டில் இருந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி வைரல் ஆகின அதனைத் தொடர்ந்து அஜித் மகிழ்ந்திருமேனியை குஷிப்படுத்தி உள்ளார். விடாமுயற்சி படம் குறித்து டிஸ்கஸ் பண்ணி வருகிறார்களாம். விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க 90% வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய்தத், ஆரவ் போன்றவர்கள் நடிக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.