கமலை போல் அதிரடியாக உடல் எடையை குறைத்த அஜித்.! பலரையும் வியக்க வைத்த சிம்பு.

simbu
simbu

திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி தன்னுடைய கேரக்டருக்காக உடலை வருத்திக்கொண்டு நடித்த தமிழ் நடிகர்கள் லிஸ்டில் இணைந்துள்ளார் நடிகர் சிம்பு. சிம்பு இவ்வாறு உடலை வருத்தி நடிப்பது இது முதல் தடவை அல்ல ஏற்கனவே மாநாடு திரைப்படத்திற்காக உடலை குறைத்து நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய திரைப்படங்களுக்கு ஏதேனும் புதிய முயற்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணி ஒரு சிலர் உடல் எடையை குறைத்தும்  அதிகரித்தும் சற்று மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

அப்படி உடலை வருத்திக்கொண்டு நடித்தவர்தான் நடிகர் கமலஹாசன் இவர் தசாவதாரம், அவ்வை சண்முகி, ஆளவந்தான், போன்ற பல திரைப்படங்களில் புதிய முயற்சி காட்ட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் புதுப்புது வித்தியாசத்தை காண்பித்து வருகிறேன்,

நடிகர் கமல் போலவே உடலை வருத்திக் கொண்டவர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் அப்படி சூர்யா பேரழகன் திரைப்படத்தில் கூன் விழுந்த இளைஞராக படம் முழுக்க நடித்திருப்பார் அதேபோல் ஐ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்களும் தனது உடலை வருத்திக்கொண்டு கூன் விழுந்த இளைஞராக படத்தின் பாதியில் இருந்து நடித்திருப்பார். அதேபோல் நடிகர் அஜித் அவர்களும் திருப்பதி படத்திற்காக யாருக்கும் தெரியாமல் தன்னுடைய உடலை குறைத்து நடித்து இருப்பார்.

ஆனால் இவர்களுக்கு முன்னாடியே தமிழ் சினிமாவில் உடலை வருத்திக்கொண்டு நடித்து சாதித்தவர்கள் உண்டு அவர்கள் ஜெமினி கணேசன் மற்றும் எம் ஆர் ராதா ஆகியா இருவரும்தான். ஆம் ஜெமினி கணேசன் 1955 ஆம் ஆண்டு வெளியான கணவனே கண் கண்டதெய்வம் என்ற திரைப்படத்தில் கூன் விழுந்த நபராக நடித்து இருப்பார்.

இது போன்ற பல நடிகர்கள் உடலை வருத்திக்கொண்டு அப்படி அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு அவர்கள் தன் சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

அப்படி கமலஹாசனுக்கு அடுத்து சிறுவயதில் இருந்து சினிமாவில் இருப்பவர் என்றால் அது சிம்பு அவர்கள் தான். இப்படி இருக்கையில் நடிகர் சிம்பு சினிமாவின் இடைப்பட்ட காலத்தில் சிம்புவின் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவிலிருந்து பட வாய்ப்பு குறைய தொடங்கியது. அப்போது முழு வீச்சில் உடல் எடையை குறைத்துக் கொண்டு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார் நடிகர் சிம்பு அப்படி அவர் கம்பேக் கொடுத்த திரைப்படம் ஈஸ்வரன்.

இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் உடலை வருத்தி கொண்டு நடித்த நமது சிம்பு அவர்களுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது அதன் பிறகு மாநாடு திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.