சமீபகாலமாக டாப் நடிகர், நடிகைகளை விமர்சனம் என்ற பெயரில் தாறுமாறாக கிழித்தெடுக்கின்றனர். ஆனால் நடிகர் நடிகைகள் அதை பெரிய விஷயமாக பொருட்படுத்தாமல் ஓடினாலும் அவரது ரசிகர்கள் ரொம்பவும் கோபமடைந்து வருகின்றனர் அந்த வகையில் சமீபகாலமாக ப்ளூ சட்டை மாறன் படங்களை விமர்சிப்பதையும்..
தாண்டி நடிகர் நடிகைகளை பயங்கரமாக விமர்சிக்கிறார். இவர் முதலில் படங்களை விமர்சித்து வந்தார் போகப் போக அந்த நடிகர்களையும் விமர்சிக்க தொடங்கினார் குறிப்பாக விஜய் – அஜித்தை பெரிதும் தாக்கி பேசி வருகிறார். அண்மையில் வெளிவந்த பீஸ்ட், வலிமை, பொன்னியின் செல்வன், இரவின் நிழல் போன்ற படங்களை பெரிதும் கலாய்த்து தள்ளினார்
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வச்சி செய்தனர். அவரும் சும்மா இல்லாமல் டாப் நடிகர்கள் படங்களில் இருக்கும் குறைகளை எல்லாம் தோண்டி எடுத்து அந்த நடிகர், நடிகைகளையும் கிழித்தார். பல ஆண்டுகளாக ரசிகர்களுக்கும், ப்ளூ சட்டை மாறனுக்கும் பிரச்சனை நடந்து கொண்டே தான் இருக்கிறது
இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார். ப்ளூ சட்டை மாறன் தனது twitter பக்கத்தில் வலிமை படத்தின் டிரைலரை 25 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர் என பதிவிட்டார் மேலும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் அருள் தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என கூறி..
DO NOT UNDERESTIMATE THE POWER OF ANNACHI என குறிப்பிட்டு உள்ளார் இது தற்பொழுது அஜித் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது மேலும் துணிவு வரட்டும் உன்னை பார்த்து கொள்கிறேன் என ரசிகர்கள் தனது ஆதங்கத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
Trailer views 2022:
The Legend 32 M. Valimai 25 M.
Do not underestimate the power of Annachi. pic.twitter.com/s1QlwZN5zt
— Blue Sattai Maran (@tamiltalkies) December 18, 2022