துப்பாக்கியில் புல்லட் லோடிங் செய்யும் அஜித்.! வைரலாகும் மிரட்டலான துணிவு பட போஸ்டர்…

thunivu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் தற்போது ஹச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் டப்பிங் பணிகளையும் நடிகர் அஜித்குமார் நடித்து உள்ளார் இந்த நிலையில் துணிவு படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மற்றும் க்ராபிஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திலிருந்து அப்டேடுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ரான் இசையில்  அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து துணிவு திரைப்படம் பொங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. இந்த நிலையில் துணிவு படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வராமல் இருந்தது  அந்த சமயத்தில் அஜித்தின் துணிவு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியானது அது மட்டுமல்லாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அஜித் அவர்கள் பெரிய துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு சாய்ந்தபடி போஸ் கொடுத்து இருந்தார்.

அதேபோல தற்போது துணிவு திரைப்படத்திலிருந்து ஒரு மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் நடிகர் அஜித் அவர்கள் பைக்கில் உட்கார்ந்து கொண்டு முதுகில் நீளமான துப்பாக்கியை வைத்துக்கொண்டு சண்டையிடுவது போல அமைந்திருக்கும் இந்த போஸ்டர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த போஸ்டரில் நடிகர் அஜித் எந்த அளவிற்கு ஆக்ரோஷமாக சண்டை இடுகிறார் என்று இதிலிருந்து தெரிகிறது அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

thunivu
thunivu