நடிகர் அஜித் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்த திரைப்படம் துணிவு. இந்த படத்தில் வங்கியில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை படமாக்கப்பட்டுள்ளது. அதனால் இது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால்..
இந்த படத்தைக் காண அஜித் ரசிகர்கள் மற்றும் மக்கள் என பலரும் ஆர்வம் காட்டினர். படம் எதிர்பார்த்தை விட சிறப்பாக இருந்தாம். அதனால் ஒவ்வொரு நாளும் துணிவு திரைப்படத்தின் வசூல் அதிகமானது. இதுவரை உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் தாண்டி சாதனை படைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து அஜித் உடனடியாக தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.
ஏகே 62 படம் லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ளது என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியது. ஆனால் இப்போது இந்த கூட்டணியில் ஏகே 62 படம் உருவாகப் போவதில்லை. ஆனால் அஜித் லைகா புரொடக்ஷனில் நடிப்பது மட்டுமே உறுதி ஆனால் வேறு ஒரு இயக்குனரை தேடி வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பல இயக்குனருடன் அஜித் கதை கேட்டுள்ளார் அதில் மகிழ் திருமேனி சொன்ன கதை ரொம்ப பிடித்து போக அஜித் நடிக்கப் போகிறார் என பல பேச்சுகள் வந்தன. இந்த நிலையில் ஒரு தகவல் ட்விட்டர் பக்கத்தில் வெளி வருகின்றன அது என்னவென்றால் அஜித்துக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது மங்காத்தா.
இந்த ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க அஜித் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அஜித்தின் 62வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வருகிறது இருந்தாலும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும்நடக்கும்..