இந்த குழந்தை நட்சதிரத்தை தான் அஜித்துக்கு மிகவும் பிடிக்குமாம்.! இந்த படத்தை பார்த்த பிறகு அவரது ரசிகராக மாறிவிட்டாராம் தல.

ajith

தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து உள்ளவர் தல அஜித். அவரது தனித்துவமான செயல் மற்றும் நடிப்பு திறமையின் மூலம் தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தனது பாசபிணைப்பின் மூலம் கட்டி இழுத்து வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரையும் மற்றும் பெண் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித் அவர்கள் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை வினோத் அவர்கள் அவரது பாணியில் எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தை போனிகபூர் அவர்கள் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்திரைப்படத்தின் சூட்டிங் பாதி முடிவடைந்த நிலையில் மீதி பாதி அரசு அனுமதியுடன் எடுக்கப்பட உள்ளது.

இத்திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹீமா குரோஷி ஹீரோயினாக நடிக்க உள்ளார் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர்கள் கார்த்திகேயா நடித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான குழந்தை நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் மகேந்திரன் தான் இவர் தற்பொழுது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் ஒரு காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை தனது குறைந்த வயதிலேயே கட்டி இழுத்தார் அதிலும்  1998 ஆம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் வெளியான கும்பகோணம் கோபாலு என்ற திரைப்படம் அஜித்திற்கு மிகவும் பிடித்த திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் மகேந்திரன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது அஜித்தை மிகவும் கவர்ந்தாம் அதிலிருந்து அவரது ரசிகராக மாறியும் விட்டாராம்.

mahendran
mahendran