நடிகர் அஜித்குமார் தனது திரையை பயணத்தில் பல வெற்றி படங்களையும், சில தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார் ஆனால் அவருடைய ரசிகர்கள் எப்பொழுதும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதால் அவருடைய மார்க்கெட் எப்பொழுதும் கீழே இறங்கியதே கிடையாது. இப்படிப்பட்ட தனது ரசிகர்களுக்காக அஜித்தும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து 62 வது திரைப்படமான “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இது அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது ஆனால் எப்பொழுது சூட்டிங் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை இதனால் அஜித் தற்பொழுது பைக் ரைடு செய்து வருகிறார்.
அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன இந்த நிலையில் பைக் ரைடின் போது ரசிகர் ஒருவருடன் அஜித்தின் நின்று வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அது தற்பொழுது இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது அது குறித்து விளாவாரியாக பார்ப்போம்..
நடிகர் அஜித்குமார் தனக்கு பிடித்ததை எப்பொழுதுமே செய்வார் அந்த வகையில் சமைப்பது, ட்ரோன் ஓட்டுவது, கார் பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஈடுபடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது அஜித் பைக் ரைடு மூலம் இந்தியாவை சுற்றி வருகிறார் அப்படி பயணிக்கும் போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.
அப்படி ஒரு ரசிகருடன் அஜித் நின்று வீடியோ எடுத்துக் கொண்டார். அப்போது நடிகர் அஜித் கண்கலங்கினார். ஏன் கண்கலங்கினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும் அஜித் கண் கலங்கியது தற்பொழுது அஜித் ரசிகர்களை சோகத்தில் அழுத்தி உள்ளது இதோ நீங்களே பாருங்கள் நடிகர் அஜித்தின் அந்த வீடியோவை..
Boys cried watching Aaditha Karikalan
Men cried when… தல 😭😭 pic.twitter.com/DkUPjGrS3A
— Aala (@aalakx) May 4, 2023