AK 62 படத்திற்கு தயாரான “அஜித்”.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து மிரண்ட தல ரசிகர்கள்

ajith
ajith

ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்த அஜித்.. கடந்த சில ஆண்டுகளாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ணுவதால் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க..

லைகா நிறுவனத்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். முதலில் விக்னேஷ் சிவன் படத்தை இயக்க உள்ளார் என கூறப்பட்டது ஆனால் அவர் சொன்ன கதை அந்த அளவுக்கு திருப்திகரமாக இல்லாததால் அவரை கழட்டி விட்டு மகிழ் திருமேனியிடம் தஞ்சமடைந்தது படக்குழு.

அவர் சொன்ன கதை சிறப்பாக இருந்தாலும்.. இன்னமும் சென்டிமென்ட் மற்றும் ஆக்சன் வேண்டுமென அஜித் கூற கதையை வேற லெவலில் ரெடி செய்து வருகிறாராம்.. வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பின் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இப்படி நிலவரம் இருக்க.. மறுபக்கம் இணையதள பக்கங்களில் ஏகே 62 மற்றும் அஜித் குறித்தும் படம் குறித்தும் பல தகவல்கள் வெளி வருகின்றன அதன்படி ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் மற்றும் வில்லனாக அருண் விஜய் போன்றோர் நடிப்பார் என தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த நிலையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தனது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க அதிரடியாக உடல் எடையை குறைத்து வருகிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவலில் இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ செம்ம ஸ்மார்ட்டாக இருக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ajith
ajith