தல அஜித் அவர்கள் நடித்துக் கொண்டிருக்கும் படம் வலிமை படத்தை வினோத் அவர்கள் இயக்கிவருகிறார் போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன எனவே ரசிகர்கள் இப்படத்தினை எதிர்பார்த்து வருகின்றனர்.
வலிமை திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என எந்த ஒரு தகவலும் வராத நிலையில் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். காதலர் தினத்தன்று மற்ற திரைப்படங்களில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட்டை வெளியிட்ட நிலையில் வலிமை படத்திலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியே வரவில்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் அடுத்த நாளே அஜித் அவர்களின் புது லுக் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர் இணையதளத்தில் இது வைரலாகி வருகிறது. இதுவே இப்படி போகுதே வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தால் இணையதளம் கதிகலங்கும் என அஜித் ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த இடுகை பார்த்த சில அஜித் ரசிகர்கள் இந்த கெட்டப்பை ஏண்டா படத்தில் வைக்கவில்லை என்று புலம்பி வருகிறார்கள். இந்த கெட்டப்பை ஏதேனும் ஒரு படத்தில் கெட்டப்பை வைத்தால் சூப்பராக இருக்கும் என அவரது ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.