தல அஜித் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஹீமா குரோஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பகட்டத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்தது பின்பு கொரோனா நோய் தொற்றால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார்கள் படக்குழு.
மேலும் இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்றும் பல சண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் என அனைத்தும் இடம் பெற்றுள்ளது எனவும் அடிக்கடி தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கிறது ஆனால் இதுவரை படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட் மட்டும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்கள் படக்குழு.
மேலும் சமீப காலமாக அஜித்தின் திரைப்படங்கள் வசூலில் கல்லா கட்டி வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளியாகிய விசுவாசம் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது, அதுமட்டுமல்லாமல் இனி வரும் அஜித் திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் எனவும் பலரும் கூறுகிறார்கள். அந்த வகையில் வலிமை திரைப்படம் இடம்பெறும் எனவும் தெரிகிறது.
இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் தலை முழுவதும் டை அடித்துக்கொண்டு தாடியில் கொஞ்சம் வெள்ளை நரை ஆளே வித்தியாசமான முறையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அஜித்.