தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் சமீபகாலமாக நடிக்கும் படங்களில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் அதிகம் இருகின்றன அதே சமயம் அந்த படங்களும் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கிறது அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம்..
மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று அதிக நாட்கள் ஓடியில் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்தது அதனை தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து விடாமுயற்சி படத்தின் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என சொன்னாலும் இதுவரை ஷூட்டிங் தொடங்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை..
இதனால் ரசிகர்கள் இந்த படம் எப்பொழுது தொடங்கும் என கேள்வி கேட்டு ஒரு பக்கம் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமாரை பற்றி பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேசியது சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அது குறித்து விலாவரியாக பார்ப்போம்.. கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, வித்தகன் கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு போன்ற படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்குமார் குறித்து பேசி உள்ளார்.
அவர் சொன்னது என்னவென்றால் அஜித் குமாருன்னு ஒரு நடிகர் இருக்காரு.. அவருக்கு நடிகவே தெரியாது ஆனால் வாழ்க்கையில் நடிப்பாரு.. என்றும் ஊருக்காக வாழ முடியாது நமக்காக வாழுங்கள் என்று விமர்சித்து பேசி உள்ளார் இதை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி சோசியல் மீடியாவில் கொடுத்து வருகின்றனர்.