விஜய்க்கு போன கதையை தட்டிப்பறித்த அஜித்..! படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்.

ajith and vijay
ajith and vijay

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தற்பொழுது தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஹச். வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்து இருக்கிறார். அவருடன் கைகோர்த்து பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருக்கின்றனர். படம் அடுத்த வருடம் பொங்கலை குறிவைத்து மிகப்பெரிய அளவில் ரிலீசாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் படம் குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சரவணா சுப்பையா இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சிட்டிசன் இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி, வினு சக்கரவர்த்தி, தேவன்,  ராஜேஷ், பாண்டு என பலர் கொடுக்கப்பட்ட..

கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வெற்றி கண்டனர். ஆனால் முதலில் சிட்டிசன் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியது அஜித்தே கிடையாதாம்..  தளபதி தான் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க சாய்ஸாக இருந்தாராம் இந்த படத்தின் கதையை எடுத்துக்கொண்டு விஜயை சந்திக்க இயக்குனர் சென்றாராம் .

அந்த சமயத்தில் தான் அஜித் தனக்கு போன் செய்து இந்த கதையில் நானே நடிக்கிறேன் என்று கூற சிட்டிசன் படத்தை ஓகே செய்தார்களாம் இந்த விஷயத்தை சமீபத்தில் இயக்குனர் வெளிப்படையாக கூறியிருந்தார். இதை அறிந்த தளபதி ரசிகர்கள் இப்படி ஒரு மாஸ் படத்தில் விஜய் நடித்திருந்தால் செம்ம சூப்பராக இருந்திருக்கும் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.