யாருக்கும் தெரியாமல் “ரகசியமாக” வைத்திருக்கும் அஜித்.. விமர்சகர் போட்ட பதிவால் வெடித்த புது சர்ச்சை.. கோபத்தில் தல ரசிகர்கள்

ajith
ajith

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் 220 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது அதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க..

இயக்குனர் மகிழ்திருமேனி உடன் கூட்டணி அமைத்து தனது 62 வது திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது  என தகவல்கள் வெளி வருகின்றன. இப்படி திரை உலகில் ஓடும் நடிகர் அஜித் இதுவரை எந்த ஒரு கிசுகிசுவிலும் சரி, எந்த ஒரு தப்பான விஷயத்திலும் அஜித் சிக்கியதே கிடையாது.

அதனால் தான் திரை உலகில் நல்ல மனுஷன் என்கின்ற பெயரை அஜித் எடுத்திருக்கிறார் இப்படிப்பட்ட அஜித்தை ஒருவர் வம்புக்கு இழுத்து உள்ளார். அவர் வேறு யாரும் அல்ல..  திரைப்பட விமர்சகர் உமர் சந்து தான் இவர் கடந்த சில தினங்களாக நடிகர், நடிகைகளை பற்றி தப்பான கருத்துக்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அண்மையில் கூட நடிகர் விஜயை வம்புக்கு இழுத்த இவர் தற்பொழுது அஜித்தையும் விட்டு வைக்கவில்லை  தனது சமூக வலைதள பக்கத்தில் உமர் சந்து அஜித் பற்றி சொல்லியது என்னவென்றால்.. நடிகர் அஜித் ரகசியமான உறவை வைத்திருக்கிறார் என்று மறைமுகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள்  யாரை போய் இப்படி சொல்ற எனக் கூறி கமெண்ட் எடுத்து வருகின்றனர் ஒரு சிலர் தொடர்ந்து நடிகர், நடிகைகளை பற்றியே தவறான பதிவுகளை போட்டு வருகிறீர்கள் நீங்கள் பிழைப்பதற்காக அடுத்தவரின் வாழ்க்கையில் ஏன் விளையாடுகிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.