சினிமா உலகில் எந்தத் துணையும் இன்றி படிப்படியாக காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் படங்களில் நடித்து தனது திறமையை காட்டி தற்போது உச்ச நட்சத்திரமாக உயர்ந்த உள்ளவர் நடிகர் அஜித்குமார் இப்பொழுது தொடர்ந்து இவரது திரைப்படங்கள் வெற்றியை சந்தித்தாலும்..
ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்தன. இதனால் ராசியில்லாத நடிகராக சினிமா உலகில் பார்க்கப்பட்டார். இருப்பினும் தன் மீது நம்பிக்கை வைத்து அஜித் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் தோல்வியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த அஜித்திற்கு நல்லதொரு படத்தை கொடுத்து அழகு பார்த்தவர் அகத்தியன்.
இவர் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து சொன்ன கதையை அஜித்திற்கு ரொம்ப பிடித்துப் போகவே உடனே படம் உருவானது இந்த படத்தில் காதலை மையமாக வைத்து உருவாகி இருந்தாலும் ஹீரோயின் பார்த்துக் கொள்ளாமலேயே காதலிப்பது புதுவிதமாக இருந்ததால் படம் அனைவரையும் கவர்ந்தது மேலும் கடைசி பத்து பதினைந்து நிமிட விருவிருப்பு வேற லெவலில் இருந்தது.
அந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு காரணமாக பார்க்கப்பட்டது. காதல் கோட்டை படத்தில் அஜித்துடன் இணைந்து தேவயானி, மணிவண்ணன், ஜிரா பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். இப்படம் அப்பொழுது வெளியாகி அதிக நாட்கள் ஓடியது அது மட்டுமல்லாமல் 1996ம் ஆண்டு 10 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய படமாகவும் இது அமைந்தது.
அப்பொழுது 10 கோடி என்பது மிகப்பெரிய வசூல் படமாக பார்க்கப்பட்டது. இப்பொழுது வேண்டுமானால் அஜித்தின் ஒவ்வொரு திரைப்படமும் 200 கோடியை தொடலாம் ஆனால் அப்போது 10 கோடியை தொடுவது என்பது மிகப்பெரிய ஒரு விஷயம்.