வலிமை படத்தை தொடர்ந்து 3 முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்க்கும் நம்ம தல.? செம்ம நியூஸ்.!

ajith-tamil360newz
ajith-tamil360newz

தல அஜித் அவர்கள் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்க காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்களோ அதையே தான் சினிமாவிலும் காட்டுகிறார் அதனாலேயே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன நபராக விளங்குகிறார்.மேலும் அவர் தனது நடிப்பின் மூலமாகவும் ரசிகர் மற்றும் சினிமா பிரபலங்களை கவர்ந்து வருகிறார். சமீப காலமாக இவரது படங்கள் மிகப்பெரிய சமுதாய கருத்தை எடுத்து உரைக்கும் படமாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் இவர் நடித்த படங்களான நேர்கொண்டபார்வை ,விசுவாசம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் கருத்தையும் எடுத்துரைத்துள்ளது.அத்தகைய படங்கள் திரையரங்கில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது தல அஜித் அவர்கள்  இளம் இயக்குனரான ஹச். வினோத் உடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் 50 பர்சன்டேஜ் முடிந்துள்ள நிலையில் மீதி படம் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் வலிமை படத்தைத் தொடர்ந்து அவர் யாருடன் அடுத்தடுத்த படங்களில் கைகோர்க்க போகிறார் என தற்போது பேச்சு அடிபட்டு வருகிறது அந்த வகையில் இவர் வலிமை படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் ஒரு படத்திலும், வெங்கட் பிரபு இயக்கும் ஒரு படத்திலும், மேலும் சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படத்திலும் இணையபோவதாக தற்போது வெளியாகி உள்ளது.

இதனால் வலிமை படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளதால் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்ப்பு  இருந்து வருகிறது தல அஜித் இவர்களது படங்களில் நடித்தால் மிக சிறப்பாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் ஆனால் இச்செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.