நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமா உலகில் சைலண்டாக இருந்துகொண்டு சூப்பரான படங்களை அண்மைகாலமாக கொடுத்து அசத்துகிறார் அந்தவகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை, வலிமை போன்ற திரைப்படங்கள் ஆகும் இந்த திரைப்படங்களை தொடர்ந்து மற்றொரு வெற்றிப்படத்தை கொடுக்க..
அஜித் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து உள்ளார். தற்போது அஜித்தின் 66வது திரைப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாவதால் ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாக இருக்கும்.
என்பதால் அஜித் உடல் எடையைக் குறித்து புதிய லுக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு படத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி போன்றவர்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் வில்லனாக பல்வேறு டாப் ஹீரோ படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிகர் மகாநதி சங்கர். குறிப்பாக அஜித் விஜய்போன்ற நடிகர்கள் படங்களில் தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்தியவர்.
இவர் அஜித்துடன் இணைந்து தீனா திரைப்படத்தில் நடித்திருந்தார் சொல்ல வேண்டுமென்றால் திரைப்படத்தில் தல என்ற பெயரை இவர்தான் முதலில் சொல்லியிருப்பார். 20 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்துடன் மகாநதி சங்கர் நடிக்க உள்ளார். இது AK 61 படத்திற்கான பிளஸ்ஸாக பார்க்கப்படுகிறது.